உதய் திட்ட ஆவணம் – முதல்வரிடம் ஒப்படைத்தார் தங்கமணி - NewsFast
NewsFast Logo

உதய் திட்ட ஆவணம் – முதல்வரிடம் ஒப்படைத்தார் தங்கமணி

உதய் திட்ட ஆவணத்தை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்துள்ளார்.

உதய் திட்ட ஆவணத்தை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்துள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை எதிர்த்த உதய் திட்டத்தில் தமிழக அரசு இணைந்தது. இதற்கான ஆவணத்தில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கையெழுத்திட்டனர். மத்திய அரசின் உதய் திட்டத்தில் 21வது மாநிலமாக தமிழகம் இணைந்தது.

ஜெயலலிதா முதல்வராக இருக்கும் வரை மத்திய அரசின் பல திட்டங்களை எதிர்த்து வந்தார். தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசுக்கு தனது எதிர்ப்பை காட்டி வந்தார். ஜிஎஸ்டி மசோதாவில் மாநில நிதி ஒதுக்கீடு விஷயத்தில் முரண்பட்டு எதிர்த்தார்.

 

மத்திய அரசின் மின்சாரம் கொள்கை திட்டமான உதய் திட்டத்தில் இணைய கடைசி வரை மறுத்துவிட்டார். அந்த துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கூட தரவில்லை. 

அதே போல் உணவு பாதுகாப்பு மசோதாவுக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார், நான்காவதாக மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நேரத்திலேயே இந்த நான்கு திட்டங்களுக்கும் ஓபிஎஸ் அரசு ஒப்புதல் வழங்கி இசைவை தெரிவித்தது.  இவற்றில் முதல் திட்டமான உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து திரும்பிய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, உதய் திட்ட ஆவணத்தை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.ஸிடம் ஒப்படைத்தார். 

NewsFast Logo